ஆசையைக் குறையுங்க
நாயகம் பெண்கள் அதிக ஆசைப்படுவதை ஆதரிக்கவில்லை. இதை தன் மகளிடமே அவர் சொல்லியிருக்கிறார்.ஒருமுறை நாயகத்தின் மகள் பாத்திமா தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி, இதை என் கணவர் வாங்கித் தந்தார் என இன்னொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் நாயகம் வரவே, “பாத்திமா! முகம்மதுவுடைய மகளின் கையில் நெருப்புச் சங்கிலி இருக்கிறது'' என்று மட்டும் சொல்லிவிட்டு, தான் வந்த விஷயம் என்ன என்பதைச் சொல்லாமலே சென்று விட்டார்.
உடனே பாத்திமா, கடைக்குப் போய் நகையை விற்று கிடைத்த பணத்தில் ஒரு அடிமையை வாங்கி விடுதலை செய்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட நாயகம் “பாத்திமாவை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கே எல்லாப் புகழும்,” என்றார்.
இப்தார்: மாலை 6:39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:17 மணி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE