சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளி மாநிலம் செல்ல முயன்ற 86 பேர்! கேரளாவுக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement
 வெளி மாநிலம் செல்ல முயன்ற 86 பேர்! கேரளாவுக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

கூடலுார்:கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து அனுமதியின்றி லாரியில், வெளிமாநிலம் செல்ல முயன்ற, 86 இளைஞர்கள், தமிழக -- கர்நாடக எல்லையான கக்கனல்லாவில் தடுத்து நிறுத்தப்பட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள, கக்கனல்லா சோதனைச்சாவடியில், போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவிலிருந்து, ஹரியானா செல்லும் கன்டெய்னர் லாரியை, சோதனை செய்தனர். அதில், ஏராளமான இளைஞர்கள், அனுமதியின்றி பயணிப்பது தெரியவந்தது.தொடர்ந்து, கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார், டி.எஸ்.பி., ஜெயசிங் விசாரணை நடத்தினர்.லாரியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 72 இளைஞர்கள் இருந்தனர். இவர்கள், கேரளா மாநிலம் எர்ணாகுளம், கொச்சி, ஆலுவா பகுதியில், பெட்ஷீட் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

ஊரடங்கு காரணமாக, வியாபாரம் பாதிக்கப்பட்டு, சிரமப்பட்டு வந்துள்ளனர். ஆலுவாவில் இருந்து, ரயில்வே டிராக் வழியாக நடந்து, திருச்சூர் மாவட்டம், சாலக்குடி வந்துள்ளனர். அங்கிருந்து, ஹரியானா செல்லும் லாரியில் ஏறியுள்ளனர். கர்நாடகா மாநிலம் மைசூரு சென்று, அங்கிருந்து உ.பி., செல்ல திட்டமிட்டிருந்தது, விசாரணையில் தெரிய வந்தது.அவர்கள் அனைவரையும், இரண்டு பஸ்களில் ஏற்றிய அதிகாரிகள், மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி, அங்கிருந்து உரிய முறையில் சொந்த மாநிலம் செல்ல அறிவுறுத்தினர்.

இதேபோல, கேரளாவில் இருந்து நாடுகாணி வழியாக, நீலகிரிக்கு வந்த லாரியை, போலீசார் சோதனையிட்ட போது, அதில், கொச்சியில் இருந்து வந்த, தெலுங்கானாவை சேர்ந்த, 14 பேர் இருந்தது தெரியவந்தது. அந்த லாரியை, போலீஸ் பாதுகாப்புடன், மீண்டும் கேரளாவுக்கு, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில்,''கேரளாவிலிருந்து அனுமதியின்றி லாரியில் வந்த, 72 பேர் மீட்கப்பட்டு, அரசு பஸ்களில் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொச்சியில் இருந்து, 14 பேருடன் வந்த லாரியும் திருப்பி அனுப்பப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X