சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டிய கட்டாயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டிய கட்டாயம்

Added : மே 18, 2020
Share
 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டிய கட்டாயம்

பந்தலுார்:'மாநில எல்லை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மீறி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநில மக்கள், நீலகிரி எல்லைக்குள் வருகின்றனர். இவ்வாறு வரக்கூடியவர்களை கண்காணிப்பு மையங்களில் தங்கவைத்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், வீடுகளில் தனிமைப்படுத்தும் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக மாநில எல்லைப்பகுதிகளில் தற்காலிக கண்காணிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் சிலர் அலுவலர்கள் வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், தமிழக எல்லைக்குள் அனுமதிப்பதுடன், கேரளா செல்வதற்கும் அனுமதிக்கின்றனர். இவ்வாறு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், மாநில எல்லை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அனுமதி இன்றி செல்லும் வாகனங்களை தடுத்து அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு பணிகளை இரவிலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X