குன்னுார் ரேலியா அணை நீர்மட்டம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுார் ரேலியா அணை நீர்மட்டம் உயர்வு

Added : மே 18, 2020
Share
குன்னுார்:குன்னுார் ரேலியா அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை, பந்துமை, ஹைபீல்டு, ஜிம்கானா உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால், 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், 43.6 அடி உயரம்
 குன்னுார் ரேலியா அணை  நீர்மட்டம் உயர்வு

குன்னுார்:குன்னுார் ரேலியா அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை, பந்துமை, ஹைபீல்டு, ஜிம்கானா உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால், 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில், 38 அடி அளவில் தண்ணீர் இருப்பு உயர்ந்துள்ளது.தற்போது, 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து குழாய் உடைந்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுத்து, 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X