சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரை சேதப்படுத்திய யானை அச்சத்தில் பொதுமக்கள்

Added : மே 18, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுார், தோட்டமூலா பகுதியில், முகாமிட்ட காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் அருகே, காயத்துடன் உலாவரும் காட்டு யானைக்கு, கால்நடை டாக்டர்கள் ஆலோசனைப்படி, வனத்துறையினர் பலாப்பழத்தில் மாத்திரைகள் வைத்து வழங்கி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம், யானை காயத்திலிருந்து தேறி வருகிறது.இந்த யானை நேற்று முன்தினம் நள்ளிரவு, தோட்டமூலா பகுதியில் நுழைந்து, தினேஷ் என்பவரின் காரை சேதப்படுத்தி சென்றது. இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'இரவில் ஊருக்குள் முகாமிடும் யானை, விவசாய பயிர்களை சேதம் செய்து வீடுகளையும் இடித்து வருகிறது. இதன் நடமாட்டம் காரணமாக, இரவில் அவசர தேவைக்குக் கூட வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X