பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்யுமா?

Added : மே 18, 2020
Share
Advertisement
கரூர் : தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், மழை நன்றாக பெய்யுமா என, கோவை வேளாண்மை பல்கலை கழக, ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நடப்பாண்டின் தென்மேற்கு பருவ மழை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை,

கரூர் : தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், மழை நன்றாக பெய்யுமா என, கோவை வேளாண்மை பல்கலை கழக, ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நடப்பாண்டின் தென்மேற்கு பருவ மழை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 'திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில், வழக்கமான மழை பெய்யும்.திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலுார், கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், வழக்கமான அளவுக்கு மழை பெய்யும்.

கடந்தாண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பாண்டில் சிறிது மழை குறைந்தாலும், சராசரி அளவையொட்டியே இருக்கும். திருச்சி மாவட்டத்தில், 274 மி.மீ., வேலுாரில், 473, திருவாரூரில், 275, தஞ்சாவூர், 292, நாகப்பட்டினம், 266, புதுக்கோட்டையில், 329 மில்லி மீட்டர்களில், மழையை எதிர்பார்க்கலாம்.மதுரை, விருதுநகர், கரூர், சேலம், பெரம்பலுார், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்கத்தை விட, குறைவாகவே பெய்யும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X