ஊட்டி:நீலகிரியில், 64 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டும், மதுவகைகள் வாங்க கூட்டம் இன்றி, பெரும்பாலான மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.மாநில அரசின் உத்தரவுப்படி, நீலகிரியில், 73 டாஸ்மாக் மதுக்கடையில், 64 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. மதுக்கடைகளுக்கு முன், 'குடி'மகன்கள் வரிசையாக நின்று, சமூக இடைவெளி கடைபிடிக்க ஏதுவாக, தடுப்பு வேலி அமைத்தனர். பல, மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.மஞ்சூர் அருகே, தேவர்சோலையில் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடை முன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்; போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் மக்கள் கலைந்து சென்றனர்.டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகாராஜா கூறுகையில், ''மாவட்டத்தில், 64 டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாங்கி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE