பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கடைகள் இன்று திறப்பு :விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

Added : மே 18, 2020
Share
Advertisement
 மார்க்கெட் கடைகள் இன்று திறப்பு  :விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

குன்னுார்:குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு சுழற்சி முறையில் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.'கொரோனா' ஊரடங்கால், குன்னுார் நகராட்சி மார்க்கெட், 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டன. சப்---கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. துாய்மை பணி மேற்கொண்டு, 3 பிரிவுகளாக பிரித்து, சுழற்சி முறையில் கடைகள் திறக்க 'ஏ, பி, சி,' என கடைகளில் எழுதும் பணி, கடந்த, 2 நாட்களாக நடந்தது. மேலும், சமூக இடைவெளிக்கு பாதிப்பு ஏற்படும் இடங்களின் தடுப்புகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து நேற்று, கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், கமிஷனர் பாலு உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பணிகள் நிறைவு பெற்றதால், இன்று (18ம் தேதி) முதல் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.சுழற்சி முறையில் திறக்கும் கடைகளில், பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; வியாபாரிகளும் முககவசம், கையுறை போன்றவை கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டது. 'விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X