கிராமத்தில் குரங்கு தொல்லை

Added : மே 18, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார் கோடேரி கிராமத்தில், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை 'அபேஸ்' செய்து செல்வது அதிகரித்து வருகிறது.குன்னுார்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சாலையோரங்களில் உள்ள குரங்குகளுக்கு, வாகனங்களில் செல்வோர் உணவு பொருட்களை வீசி பழக்கப்படுத்தி விட்டனர். தற்போது, வாகனங்கள் வராத காரணத்தால், சாலைகளில் காத்திருந்த பல குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை 'அபேஸ்' செய்ய துவங்கி உள்ளன.இந்நிலையில், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோடேரி கிராமத்தில், கடந்த சில நாட்களாக, பகல் நேரத்தில், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதுடன், கேபிள் ஒயர்களை சேதம்செய்து வருகின்றன.மக்கள் கூறுகையில்,'கடந்த சில நாட்களாக குரங்கு பிரச்னை கிராமத்தில் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X