இ---பாஸ் அனுமதி தேவையில்லை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ---பாஸ் அனுமதி தேவையில்லை'

Added : மே 18, 2020
Share
ஊட்டி:'நான்காம் கட்ட ஊரடங்கு புதிய தளர்வில், நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல, இ--பாஸ் அனுமதி தேவையில்லை,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.நான்காம் கட்ட ஊரடங்கு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில், 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில், நீலகிரியில், 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகம் இயங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வசதியாக, பொது போக்குவரத்துக்கு

ஊட்டி:'நான்காம் கட்ட ஊரடங்கு புதிய தளர்வில், நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல, இ--பாஸ் அனுமதி தேவையில்லை,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.நான்காம் கட்ட ஊரடங்கு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில், 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில், நீலகிரியில், 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகம் இயங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வசதியாக, பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் இ--பாஸ் அனுமதி தேவையில்லை. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே குறிப்பிட்ட நபர்களுடன் வாகனங்கள் சென்று வரலாம். 'சுற்றுலா ஸ்தலங்களுக்கான தடை தொடரும். மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ--பாஸ் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X