பொது செய்தி

தமிழ்நாடு

மேகதுாது செயலியால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : மே 18, 2020
Share
Advertisement

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையால் அறிமுகப்படுத்தப்பட்ட, 'மேகதுாது' செயலி, ஊரடங்கு காலத்தில் மிகவும் உதவிகரமாக இருப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.கடந்த பிப்ரவரியில், வேளாண் பல்கலை அறிமுகப்படுத்திய, 'மேகதுாது செயலி', கடந்த பத்து நாட்களுக்கான வானிலையையும், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையையும் தெரிவிக்கும்.மழையளவு, ஈரப்பதம், வெப்பம், காற்றின் வேகம், மேகமூட்டம், குறித்த துல்லியமான தகவல்களை இந்த செயலி தெரிவிக்கும்.இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆகியவை இணைந்து, உருவாக்கியுள்ள இச்செயலி, விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. சித்திரைச்சாவடி பாசன விவசாயிகள் மயில்சாமி, காளிச்சாமி உள்ளிட்டோர் கூறுகையில், 'மேகதுாது செயலி, விவசாயத்துக்கான மிகப்பெரிய வழிகாட்டி. ஊரடங்கு காலத்தில் விவசாயத்துக்கு, மிகவும் உதவியாக இருக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X