இஸ்ரேலில் ஒன்றரை ஆண்டு பிரச்னைக்கு தீர்வு | Israel swears in unity government after long political crisis | Dinamalar

இஸ்ரேலில் ஒன்றரை ஆண்டு பிரச்னைக்கு தீர்வு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (4)
Share

ஜெருசலேம்: இஸ்ரேலில், புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.



latest tamil news



பெஞ்சமின் நேதன்யாஹுவின் லிக்குட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் கடும் அதிருப்திக்கு இடையே, அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. மேற்காசிய நாடான இஸ்ரேலில், பெஞ்சமின் நேதன்யாஹு நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். கடந்தாண்டு நடந்த தேர்தலில், அவரது, லிக்குட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.எதிர்க்கட்சியான, புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதற்கு பின், இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.முதல், 18 மாதங்களுக்கு பெஞ்சமின் நேதன்யாஹுவும், அதற்கு பின், புளூ அண்ட் ஒயிட் கட்சி தலைவர், பென்னி கான்ட்சும்,பிரதமராக பதவி வகிப்பது என, முடிவு செய்யப்பட்டது.

முதல், 18 மாதங்களுக்கு, பென்னி கான்ட்ஸ், ராணுவ அமைச்சராக பதவி வகிப்பது என்றும், உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, கடந்த, 14ல், பெஞ்சமின் நேதன்யாஹு தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க திட்டமிடப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில், அமைச்சர் பதவி கிடைக்காத, லிக்குட் கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், நேதன்யாஹுவுக்கு எதிராக கொடி பிடித்தனர். இதனால் புதிய அரசு அமைவது, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.


latest tamil news



கடந்த மூன்று நாட்களாக, தங்கள் கட்சி பிரமுகர்களுடன், நெதன்யாஹு தொடர்ந்து பேச்சு நடத்தினார்.ஆனாலும், லிக்குட் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், நேதன்யாஹுவின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், தன் கட்சியினரின் கடும் அதிருப்திக்கு இடையே, நேதன்யாஹு பிரதமராக நேற்று பதவியேற்றார்.கூட்டணி அமைச்சரவையும் பதவிஏற்றது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X