பொது செய்தி

தமிழ்நாடு

கோமுகி ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் தயார்

Added : மே 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை முடிந்து சாலைப்பணிகளும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் கள்ளக்குறிச்சிக்கு வருவதற்கு கோமுகி ஆற்றினை கடந்து 6 கி.மீ., தொலைவிற்குள் கள்ளக்குறிச்சியை அடைய முடியும். ஆனால் மழைக்காலங்களில் ஆற்றின் மீது பாலம் இல்லாததால் தண்ணீர் வரும் காலங்களில் சோமண்டார்குடி, மோ.வன்னஞ்சூர், ரோடு மாமாந்துார் வழியாக சுற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி வரவேண்டும். இதனால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 2-ம் தேதி ரூ.2.32 கோடி மதிப்பில் சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றின் மீது உயர்மட்டம் பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. இப்பணி பல மாதங்களாக கண்டுகொள்ளாமல் விடுபட்டுப்போன நிலையில் இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பணிகள் மீண்டும் துவங்கியது.தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையிலிருந்து சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி கிராமங்கள் வழியாக செல்லும் சாலையில் பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் சார்பில் புதிய தார்ச்சாலை போடும் பணிகளும் துவங்கியது. இந்தப்பணிகள் ் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. ஆனால் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால் தாமதமடைந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவுபெற்று கோமுகி ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய பாலமும் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பொது மக்கள் சுற்றிக்கொண்டு செல்லாமல் நேரடியாக செல்வதற்கான வழி ஏற்பட்டுள்ளதால், விரைவில் திறப்பு விழாவிற்கு நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X