பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குழந்தைகள் நிவாரண நிதி வழங்கல்

Added : மே 18, 2020
Share
Advertisement

மரக்காணம்: மரக்காணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் காவல்துறை, சுகாதாரத்துறையினருக்கு அமைச்சர் சண்முகம் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.மரக்காணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை, காளியாங்குப்பம், ஆத்திக்குப்பம் மற்றும் நகரம் சார்பில் கழிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள டாக்சி ஓட்டுனர், சலவை தொழிலாளி, சுமை துாக்கும் தொழிலாளி, மற்றும் ஏழை, எளியமக்கள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி ஒன்றிய துாய்மை பணியார்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜ், நகர செயலாளர் கனகராஜ், மாணவரணி செயலாளர் அர்ச்சுனன் முன்னாள் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய மேலவைபிரதிநிதி தீபம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் குழந்தைகள் சம்யுக்த வர்மா, அனிஷ் வர்மா ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூபாய்.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக அமைச்சர் சண்முகத்திடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X