பாஞ்சாலத்தில்வி.சி., ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாஞ்சாலத்தில்வி.சி., ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பாஞ்சாலம் கிராமத்தில் வி.சி.,மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தில் ஜெஸ்ரீயை எரித்து கொலை செய்தவர்களை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.,மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திண்டிவனம் அருகே பாஞ்சாலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். சாந்தி பெருமாள் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தமிழாதவன், ஆதிசாரதி, சிந்தனைவேந்தன், காமராஜ், பெருமாள், பிரபாகரன், சிலுவைசெந்தில், சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X