சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கியது தொடர்பாக தந்தை, மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள்மணி,42; இவர், சின்னசேலம் ரேஷன் கடை எண் - 7 ல் விற்பனையாளராக பணிபுரிகிறார். அருள்மணி நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைவழங்கி கொண்டிருந்தார்.அப்போது, சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த முத்துவேல் மனைவி அமுதா என்பவர், பொருட்கள் வழங்கும் இடத்தில் வரிசையில் நிற்காமல் எனக்கு முதலில் பொருட்களை கொடுங்கள் என்று கேட்டதால், அருள்மணியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அமுதா, தனது மகன் சாமுவேலுக்கு போன் செய்து, அருள்மணி தன்னை கீழே தள்ளிவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அமுதாவின் கணவர் முத்துவேல் மற்றும் மகன் சாமுவேல் ஆகிய இருவரும் ரேஷன் கடைக்கு வந்து அருள்மணியை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்து மயங்கிய அருள்மணி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.இது குறித்து அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் அமுதாவின் கணவர் முத்துவேல்,49; மகன் சாமுவேல்,24; ஆகிய இருவர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X