சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் அ.ம.மு.க.,பிரமுகர் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement
திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி அதிகாரியிடம் பிரச்னை செய்த, முன்னாள் அ.ம.மு.க., நகர செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில், மட்டன் கடை வைத்திருப்பவர் ரபீதீன். இவர் அ.ம.மு.க.,பேரவை செயலாளராக உள்ளார். இவரது கடை இருந்த பகுதியில், நகராட்சி இரு சக்கர வாகனம் பார்க்கிங் செய்வதற்கு ஒதுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களுக்கு

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி அதிகாரியிடம் பிரச்னை செய்த, முன்னாள் அ.ம.மு.க., நகர செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில், மட்டன் கடை வைத்திருப்பவர் ரபீதீன். இவர் அ.ம.மு.க.,பேரவை செயலாளராக உள்ளார். இவரது கடை இருந்த பகுதியில், நகராட்சி இரு சக்கர வாகனம் பார்க்கிங் செய்வதற்கு ஒதுக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்,நகரமைப்பு அதிகாரி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் போலீசார் துணையுடன் காலி செய்வதற்கு சென்றனர்.அப்போது, ரபீதீன் மற்றும் திண்டிவனம் முன்னாள் நகர அ.ம.மு.க.,செயலாளர் அப்பாஸ்மந்திரி ஆகியோர் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் அப்பாஸ்மந்திரி, ரபீதீன், உமர், ரகுமான், காதர்பாஷா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் டவுன் போலீசார், நேற்று காலை அப்பாஸ்மந்திரியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X