இளம்பெண் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை

Added : மே 18, 2020
Share

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே இளம்பெண் வயிற்றுவலியால் தற்கொலை செய்து கொண்டார்.திருநாவலுார் அருகே பரிக்கல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கோமதி,33; இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது.கோமதி, வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததால், கடந்த 15ம் தேதி மனமுடைந்து ஊமத்தங்காய் அரைத்து சாப்பிட்டதால், மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X