கஞ்சா வைத்திருந்த  இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா வைத்திருந்த  இருவர் கைது

Added : மே 18, 2020
Share

கோவை:விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை பாலக்காடு பிரதான ரோடு அருகே, செங்குளம் ரோட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து, சோதனை செய்தனர்.சோதனையில் அவர்களின் பைகளில், கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த தாகீர் உசேன், 21, குனியமுத்துார் ஐயப்பா நகரை சேர்ந்த முகமதுஆசிக், 23 என தெரிந்தது.விற்பனைக்காக கஞ்சா எடுத்து வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 1,250 கிராம் கஞ்சா, பைக், ரூ.7,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X