பொது செய்தி

தமிழ்நாடு

வாணியந்தல் ஊராட்சியில் தி.மு.க., நிவாரண உதவி வழங்கல்

Added : மே 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: வாணியந்தல் ஊராட்சியில் தி.மு.க., சார்பில் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., உதயசூரியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த தி.மு.க., மாவட்ட விவசாய அணி அமைப்பாளரான ஊராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.ஊராட்சியை சேர்ந்த 567 ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் தொகுப்பு, கபசுர குடிநீர், சானிடைசர், முககவசம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வழங்கினார்.எம்.எல்.ஏ., உதயசூரியன், முககவசம் அணிவதன் அவசியம், கபசுர குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துபேசினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆராவமுதன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்புமணிமாறன், நகர அமைப்பாளர் அருண், அவைத்தலைவர் முருகன், கிளை செயலாளர்கள் மாசிலாமணி, சேகர், வேல்முருகன், சிங்காரவேல், கண்ணன், ராஜவேல், மாயவன், ராமசாமி, முத்துக்கிருஷ்ணன், ராமச்சந்திரன், சக்திவேல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X