பாதாள சாக்கடை உடைப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

ரோடு மோசம்நல்லாம்பாளையம், பாலாஜி நகர், மூன்றாவது கிராஸில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை, தார் சாலையாக புதுப்பிக்க வேண்டும்.- மேனகா, பாலாஜி நகர்.

மரத்தை அப்புறப்படுத்தணும்கே.என்.ஜி.,புதுார், விநாயகர் கோவில் எதிரில், காய்ந்து, பட்டுப்போன தென்னை மரம் விழும் நிலையில் உள்ளது. இம்மரம் குடியிருப்புகளுக்கு மேல் விழுந்து விபத்து ஏற்படும் முன், மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.- ரமேஷ், கே.என்.ஜி., புதுார்.

மின் கம்பத்தை மாற்றணும்சிறுவாணி ரோடு - வடவள்ளி ரோடு, சிறுவாணி நகரில், மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- நாகராஜ், சிறுவாணி நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்புகருமத்தம்பட்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது; கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- குமரேசன், கருமத்தம்பட்டி.

துர்நாற்றம் தாங்க முடியலசவுரிபாளையம் - பி.எஸ்.ஜி., மருத்துவமனை அருகில், பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாய் உடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.- சங்கர், சவுரிபாளையம்.

ஆபத்தான கட்டடம்குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல் உள்ள, ஆழியாறு குடிநீர் தேக்க நிலைய கட்டடம் சிதிலமடைந்துள்ளது. மரங்கள் வளர்ந்து, சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.- அய்யாச்சாமி, சி.டி.ஓ., காலனி.

விளக்கு எரிவதில்லைவடவள்ளி, வள்ளலார் நகர் வீதி, குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- நரசிம்மன், வள்ளலார் நகர்.

சாக்கடையை துார்வாரணும்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, வரதராஜபுரத்தில் இருந்து, சிங்காநல்லுார் செல்லும் சாலையில், வாட்டர் டேங்க் அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது; கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில், இக்கால்வாயை துார் வார வேண்டும்.- கலாவதி, வரதராஜபுரம்.

சாலையில் சாக்கடை கழிவுநீர்ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் வளாகம் அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- கனகசுந்தரம், நஞ்சுண்டாபுரம் ரோடு.

விளக்கு எரிவதில்லைதொண்டாமுத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட, கொம்பனுார், வடக்கு வீதியில், கடந்த இரு வாரங்களாக, தெருவிளக்குகள் எரிவதில்லை.- ராஜசேகர், கெம்பனுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X