சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரை தாக்கியவர் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

குனியமுத்துார்:குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில், பணிபுரிபவர் ஏட்டு வடிவேல். நேற்று முன்தினம் நள்ளிரவு, திருநகர் காலனி, சிறுவாணி டேங்க் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரிடம், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் வசிப்பவர், குடிபோதையில் மனைவியை அடிப்பதாக கூறியுள்ளார். அவருடன் சென்ற வடிவேல், அக்குறிப்பிட்ட வீட்டில் வசிப்பவரிடம் விசாரித்தார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.திடீரென அந்நபர் வடிவேலுவை கீழே தள்ளி தாக்கியுள்ளார். சிறு காயமடைந்த வடிவேல், அந்நபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். கோகுல், 37 அந்த நபர், ஜெராக்ஸ் கடை நடத்தி வருவது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X