பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் குழுவினருக்கு வேளாண் இயந்திரம்

Added : மே 18, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: கூட்டுப் பண்ணையத் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 36 லட்சம் ரூபாய் மதிப்பில், வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் துறை சார்பாக, கூட்டுப் பண்ணையத் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் மகேஸ்வரி தலைமை வகித்து, கடம்பத்துார், திருவாலங்காடு ஒன்றியங்களில் உள்ள, ஆறு குழுவினருக்கு, 36 லட்சம் ரூபாய் மதிப்பில், வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:திருவள்ளுர் மாவட்டத்தில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ், 55 உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும், தலா, 5 லட்சம் ரூபாயில், வேளாண் இயந்திரம் கொள்முதல் செய்ய, 2.75 கோடி ரூபாய் ஒப்படைப்பு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் சம்பத் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் எபினேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X