நிவாரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கல்

Added : மே 18, 2020
Share

திருத்தணி: ஊரடங்கால், திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி ஊராட்சி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆவின் சேர்மன் சந்திரன் சார்பில், துப்புரவு தொழிலாளர்கள், ஏழைகள் என, 750 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை நிவாரணம் வழங்கும் விழா நேற்று, வேலஞ்சேரியில் நடந்தது.இதில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, எம்.எல்.ஏ.,க்கள் பொன்னேரி பலராமன், திருத்தணி நரசிம்மன் ஆகியோர் பங்கேற்று நிவாரண பொருட்கள் வழங்கினர்.நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம்அமுதா, தாசில்தார் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, பசுபதி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X