தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா| Dinamalar

தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

Added : மே 18, 2020
Share

தேவகோட்டை : தேவகோட்டை பஸ்ஸ்டாண்ட்,மார்க் கெட் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு இருந்தும் பெயரளவிற்கு சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்பு நகராட்சியால் அகற்றப்பட்டது.

போக்குவரத்திற்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்பு காணப்பட்டாலும் நகராட்சியினர் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக ராம்நகர் பகுதியிலிருந்து தலைமை அஞ்சலகம் வரை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. காய்கறி, மீன் மார்க்கெட் இருந்தாலும் விரும்பிய இடங்களில் கடைகள் அமைக்கப்படுவதை நகராட்சியினரும் தடுப்பதில்லை. கொரோனாவிற்காக சிலம்பணி ஊரணி அருகே, அழகப்பா பூங்கா அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்களை தொடர்ந்து அப்பகுதியிலேயே செயல்படுத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X