பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை பிரச்னைக்கு தீர்வு புதிய இடத்தில் தொடக்கம்

Added : மே 18, 2020
Share
Advertisement

திருப்புவனம் : திருப்புவனத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த வாரச்சந்தை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு, புதிய இடத்தில் நேற்று முதல் தொடங்கப்பட்டது.

திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் நடந்து வந்த வாரச்சந்தையால் பலரும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்திற்கு வாரச்சந்தை மாற்றப்பட்டது. கோர்ட் தடை காரணமாக 8 மாத காலமாக நிறுத்தப்பட்ட வாரச்சந்தை மீண்டும் சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் நேற்று முதல் செயல்பட துவங்கியது.மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன் வாரச்சந்தையை தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் (பொறுப்பு) சிந்து, எம்.எல்.ஏ., நாகராஜன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தாசில்தார் மூர்த்தி, செயல் அலுவலர் சந்திரகலா பங்கேற்றனர். த.மா.கா., மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X