சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3வது முறையாக மீன்பிடி வலைகள் எரிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

பழவேற்காடு; பழவேற்காட்டில், மூன்றாவது முறையாக, மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.பழவேற்காடு, மீனவப் பகுதியில், மீனவர்கள், ஒன்றரை மாதமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் உள்ளனர். இவர்களது, மீன்பிடி வலை மற்றும் படகுகள், பழவேற்காடு ஏரிக்கரையோரம் வைக்கப்பட்டு உள்ளன.மீனவர்களின் மீன்பிடி வலைகளை, இரவு நேரங்களில், சமூக விரோதிகள் எரித்துவிட்டு செல்கின்றனர். கடந்த, 1 மற்றும் 10ல், திருமலை நகர் மீனவ கிராமத்தினரின், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டு உள்ளன. பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து மீனவர்களின் வலைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.வலைகளை எரிக்கும், சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X