தமிழ்நாடு

சிவகங்கையில் கொரோனாவிற்கு சிறப்பு வார்டு

Added : மே 18, 2020
Share
Advertisement

சிவகங்கை : ''கொரோனா தொற்றுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க, சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்படும்,'' என கலெக்டர் ஜெயகாந்தன் உறுதியளித்தார்.

முதற்கட்டமாக டில்லி மாநாடு சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியது. இதில், 12 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். ஏப்., 20 முதல் மே 12 வரை 23 நாட்கள் தொற்றின்றி பச்சை மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்தது.இந்நிலையில் மும்பையில் இருந்து மே 11ல் காரைக்குடி வந்த 29 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது. அவர் உட்பட அங்கிருந்து வந்த 14 பேர்களுக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்னும் 140 பேர் வரை மும்பையில் இருந்து வர உள்ளதால், தொற்று இருப்போருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய மருத்துவமனை புனரமைப்பு

புதிய மருத்துவமனையில் கொரோனா வார்டு இயங்குவதால் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ, அறுவை சிகிச்சை, தொடர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.இதற்காக, பழைய அரசு மருத்துவமனையை புனரமைத்து, கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்த கலெக்டர் திட்டமிட்டுள்ளார். இங்கு அமையும் பட்சத்தில் தனியாக டாக்டர், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் குழு நியமிக்கப்படும். இதன் மூலம் புதிய மருத்துவமனையில் மற்ற சிகிச்சை வழக்கம் போல் நடக்கும்.

கொரோனாவிற்கு சிறப்பு வார்டுகலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது: ஒரு வாரத்திற்குள் பழைய மருத்துவமனையை புனரமைத்து, அங்கு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்படும். இதற்கான பணியை விரைவில் முடித்து, கொரோனா வார்டு இங்கு மாற்றப்படும். பிற நோயாளிகள் புதிய மருத்துவமனைக்கு சென்று வழக்கமான சிகிச்சையை தடையின்றி பெறலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X