வெளியூரில் வசிக்கும் 10ம் வகுப்புமாணவரை அழைத்து வர இ---பாஸ்| Dinamalar

தமிழ்நாடு

வெளியூரில் வசிக்கும் 10ம் வகுப்புமாணவரை அழைத்து வர 'இ---பாஸ்'

Added : மே 18, 2020
Share

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள வெளியூரில் வசிக்கும் மாணவர்களை அழைத்து வர 'இ--- பாஸ்' பெற்றுத்தரும் முயற்சியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க, அரசு மே 31 வரை சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி சமூக இடைவெளியுடன் நடத்தப்பட உள்ளது.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ஜூன் 1 முதல் 12 வரை அந்தந்த பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். கல்வி மாவட்ட அளவில் சிவகங்கையில் 6 ஆயிரத்து 200, தேவகோட்டையில் 7 ஆயிரத்து 600, திருப்புத்துாரில் 4 ஆயிரத்து 200 பேர் என 18 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

ஆலோசனை வழங்க குழு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு சார்ந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க அந்தந்த மாவட்டத்தில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் தலைமையில் 5 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினரின் அலைபேசி எண், மாணவர்கள் 'ஹால்டிக்கெட்டில்' அச்சிடப்படும். அந்த எண் மூலம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.

மாணவர், ஆசிரியருக்கு 'இ--பாஸ்'

ஊரடங்கால் வெளி மாவட்ட, மாநிலங்களில் தங்கியுள்ள இம்மாவட்ட மாணவர்களை, 'இ- பாஸ்' மூலம் அழைத்து வர அரசு அனுமதித்துள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்கள் மாணவரின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு, 'இ- பாஸ்' பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு பணிக்கு வெளியூரில் இருந்து ஆசிரியர் வருவதற்கும் வாகன 'இ--பாஸ்' பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X