வீணாகும் பறங்கிக்காய்கள்: கவலையில் விவசாயிகள்

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், பறங்கிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள், ஊரடங்கு காரணமாக நஷ்டத்தை சந்தித்து, கவலையில் உள்ளனர்.தோட்டக்கலைத் துறை பயிரில், குறைந்த நீரை வைத்து சாகுபடி செய்வதில், பறங்கிக்காயும் ஒன்று. செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், இந்தாண்டு, பறங்கிக்காய் பயிரிடப்பட்டிருந்தது.இந்நிலையில்,

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், பறங்கிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள், ஊரடங்கு காரணமாக நஷ்டத்தை சந்தித்து, கவலையில் உள்ளனர்.தோட்டக்கலைத் துறை பயிரில், குறைந்த நீரை வைத்து சாகுபடி செய்வதில், பறங்கிக்காயும் ஒன்று. செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், இந்தாண்டு, பறங்கிக்காய் பயிரிடப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, அறுவடை செய்யும் நிலையில் விளைந்திருந்த பறங்கிக்காய், வீணாகும் நிலை உள்ளது.சில விவசாயிகள், காய்களை அறுவடை செய்து, பொது இடத்தில் குவித்து வைத்துள்ளனர். அவற்றை வாங்க ஆட்கள் இல்லாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இது குறித்து, பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 38, கூறியதாவது:பறங்கிக்காய் மூன்று மாத பயிராகும். 1 ஏக்கருக்கு, 20 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால், பறங்கிக்காயை பறிக்காமல், கொடியிலேயே கருகி வீணாகின்றன.இந்தாண்டு, பூச்சி தாக்கம், வெயில் தாக்கம், தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல், நன்கு விளைந்திருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளோம்.சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள், கொள்முதல் செய்ய வருவதில்லை. வெம்பிய காய்களை, குப்பையில் தான் போடுகிறோம். பறங்கிக்காயைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு, ஊரடங்கால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாயிகளின் நஷ்டத்தை கருதி, அரசு, உரிய நிவாரணம் வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.விற்பனைக்கு உள்ளதுதிருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், பட்டிக்காடு, நெரும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்போரூர் ஒன்றியத்தில், வளர்குன்றம், பெரியவிப்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும், பறங்கிக்காய் விற்பனைக்கு உள்ளது. வியாபாரிகள் கொள்முதல் செய்யலாம் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
18-மே-202007:19:02 IST Report Abuse
RAMAKRISHNAN K அது "பரங்கிக்காய்" பறஙகிக்காய்" அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X