பொது செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூரில் அரசு பஸ்கள் தயார்: 25 பயணியருக்கு மட்டுமே இருக்கையில் அனுமதி

Added : மே 18, 2020
Share
Advertisement

உத்திரமேரூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மே, 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 18 முதல், 50 சதவீத பணியாளர்களுடன், அரசு அலுவலகங்கள் இயங்கும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், காஞ்சி புரம் மண்டலம், உத்திர மேரூர் பணிமனையில் உள்ள, 27 'ரூட்' பஸ்கள் மற்றும் நான்கு, 'ஸ்பேர்' பஸ்களின் இருக்கைகளில், எண்கள் எழுதப்பட்டு, தலா, 25 பேருடன் மட்டுமே பயணிக்க தயார் நிலையில் உள்ளன.இது குறித்து, உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் கருணாகரன் கூறியதாவது:பணிமனையில் உள்ள, 31 பஸ்களிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பஸ்களில், பொது பராமரிப்பு, டயர் மற்றும் பேட்டரி பராமரிப்பு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி, பயணியருக்கான இருக்கையில், 25 பேர் மட்டுமே அமரும் வகையில், இருக்கை எண் எழுதப்பட்டுள்ளது. மேலும், 6 அடி இடைவெளியில், ஐந்து பேர் நின்று பயணம் செய்யலாம்.பஸ்களை இயக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, முகக் கவசம் வழங்கப்பட்டு உள்ளது. அரசு உத்தரவு வந்தவுடன், எந்நேரமும், அனைத்து பஸ்களையும் இயக்க ஊழியர்களும், தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X