பொது செய்தி

தமிழ்நாடு

எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்

Added : மே 18, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று, குடையுடன் சென்றவர்களுக்கு மட்டுமே, மது வழங்கப்பட்டது. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்பதால், மூட்டைக் கட்டி, சுமக்க முடியாமல் பலர் எடுத்து சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. முதல் நாள் அதிகாலையிலிருந்து, மது வாங்குவதற்காக, பலர் காத்திருந்தனர்.ஒருவருக்கு ஒரு,'டோக்கன்' மட்டும் வழங்கப்பட்டது என்றாலும், எவ்வளவு மது வேண்டும் வாங்கலாம் என, கூறப்பட்டது.இதனால் சிலர், மது பாட்டில்களை மூட்டைக் கட்டி, சுமக்க முடியாமல் துாக்கி சென்றனர். சிலர், இருசக்கர வாகனங்களில், பெட்டிகளில் அடுக்கி வைத்தனர்.முதல் நாளே, 250 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டதால், அவர்கள் மட்டும், நேற்று காலை, மது வாங்க அனுமதிக்கப்பட்டனர். மதியத்திற்கு மேல், மீண்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், வழக்கத்தைவிட, நேற்று, கூட்டம் குறைந்து காணப்பட்டது.செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதனால், உத்திரமேரூர் மற்றும் வேடந்தாங்கல் அடுத்த புழுதிவாக்கத்தில் இயங்கும் கடைகளில், இரு நாட்களாக கட்டுக்கடங்காத குடிமகன்கள் கூட்டம் தள்ளாடுகிறது.இதன் காரணமாக, நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற விரும்பாத சிலர், ஏற்கனவே வரிசையில் நின்று டோக்கன் பெற்ற குடிமகன்களிடம் இருந்து, அந்த டோக்கனை விலைக்கு வாங்குகின்றனர்.இவ்வாறு, 500 முதல் 1,000 ரூபாய் வரை, டோக்கனை விற்பனை செய்து, மீண்டும் டோக்கனுக்கு வரிசையில் நிற்கும் குடிமகன்கள் கூட்டமும், டாஸ்மாக் கடைகளில் அதிகரித்துள்ளது.இது குறித்து, புழுதிவாக்கம் டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள் சிலர் கூறியதாவது:காலையில், ஒரு டோக்கனுக்கு, 10க்கும் அதிகமான பாட்டில்கள் வழங்கப்பட்டன. மதியத்திற்கு மேல், ஒரு டோக்கனுக்கு, நான்கு குவார்ட்டர் பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டன.இதனால், அதிக மதுபாட்டில் வாங்கிய நபர்கள், கடை முன், 50 ரூபாய் அதிகம் வைத்து, மதுபாட்டிலை விற்றனர்; போலீசாரும் இதை கண்டுகொள்ளவில்லை. டோக்கன் முறை, அடுத்தடுத்த நாட்களில், பல குளறுபடிகளை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X