பொது செய்தி

தமிழ்நாடு

'ஹெல்ப்லைன்' எண் அறிமுக தின விழா

Added : மே 18, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: ஆண்டுதோறும், மே, 17ல், சர்வதேச குழந்தைகள் ஹெல்ப்லைன் எண் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' இந்தியா - குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், இந்த தினம், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் நேற்று நடந்தது.இதன் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். சர்வதேச அளவில் குழந்தைகளுக்காக, 24 மணி நேரமும் செயல்படும், இலவச தொலைபேசி எண், 1098ன் பயன்பாடு குறித்து, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் பேசினார்.கொரோனா தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், குழந்தைகள் உளவியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது குறித்தும், திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல் பேசினார். அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X