கேமராவை பறக்கவிட்ட 5 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேமராவை பறக்கவிட்ட 5 வாலிபர்கள் கைது

Added : மே 18, 2020
Share

வாலாஜாபாத்; ஊத்துக்காடு, 'டாஸ்மாக்' அருகே, அனுமதியின்றி, பறக்கும் கேமராவை இயக்கிய, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், டாஸ்மாக் கடைகள் இரண்டு இயங்கி வருகின்றன. இங்கு, அனுமதி இன்றி பறக்கும் கேமராவை, சிலர் இயக்கியுள்ளனர்.இது குறித்து, ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் அருணகிரி புகாரின்படி, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த உசேன், 29, பாலாஜி, 21, சரண், 23, மற்றும் சென்னை பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், 28, ராஜாமணி, 30, என, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X