பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

Added : மே 18, 2020
Share
Advertisement

வேளச்சேரி: இரண்டடுக்கு மேம்பாலம் பணி நடைபெறுவதால், வேளச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.வேளச்சேரியில் ஏற்படும் கடுமையான நெரிசலுக்கு தீர்வு காண, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணி, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. துாண்கள் அமைப்பது, நில ஆர்ஜிதம், குழாய்கள் மாற்றி அமைப்பது போன்ற பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.மூன்று சாலைகள் சந்திக்கும், விஜயநகர் சந்திப்பு மைய பகுதியில், ஐந்து துாண்கள் அமைக்க வேண்டி உள்ளன. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.கிண்டியில் இருந்து, பள்ளிக்கரணை நோக்கி செல்லும் வாகனங்கள், வேளச்சேரி பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும். வேளச்சேரி விரைவு சாலை பகுதிவாசிகள், ராஜலட்சுமிநகர், ஓரண்டியம்மன்கோவில் தெரு வழியாக, பள்ளிக்கரணை நோக்கி செல்ல வேண்டும்.பள்ளிக்கரணையில் இருந்து, கிண்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், வேளச்சேரி பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள், விஜயநகர், 1 மற்றும், 5வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் வழியாக விரைவு சாலையை அடைந்து, அங்கிருந்து இதர இடங்களுக்கு செல்ல வேண்டும்.இதற்காக, ஆங்காங்கே தடுப்பு அமைத்து, வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X