களைகட்ட துவங்கியது மாம்பழ சீசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்ட துவங்கியது மாம்பழ சீசன்

Added : மே 18, 2020
Share
மாதவரம்; கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னைக்கு மாம்பழ வரத்து தாமதமாகவே துவங்கியுள்ளது.சென்னை, மாதவரம் மாம்பழ சந்தைக்கு, ஆண்டுதோறும், ஏப்ரல் மாத இறுதியில், மாம்பழ வரத்து துவங்கி, ஜூன் மாதம் வரை நீடிக்கும்.அதற்காக, ஆந்திரா மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம், கொப்பூர், பாப்பரம்பாக்கம், வெள்ளேரி தாங்கல் மற்றும் மாதவரம் சுற்று வட்டாரங்களில் உள்ள தோட்டங்களில்

மாதவரம்; கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னைக்கு மாம்பழ வரத்து தாமதமாகவே துவங்கியுள்ளது.சென்னை, மாதவரம் மாம்பழ சந்தைக்கு, ஆண்டுதோறும், ஏப்ரல் மாத இறுதியில், மாம்பழ வரத்து துவங்கி, ஜூன் மாதம் வரை நீடிக்கும்.அதற்காக, ஆந்திரா மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம், கொப்பூர், பாப்பரம்பாக்கம், வெள்ளேரி தாங்கல் மற்றும் மாதவரம் சுற்று வட்டாரங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து, தினமும், 5 டன் வரை, மாம்பழ வரத்து நீடிக்கும்.ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு எதிரொலியால், போக்குவரத்து வசதியின்றி, சில தினங்களுக்கு முன் தான், மாம்பழ வரத்து துவங்கியது. மாம்பழ வரத்து, 2 டன் அளவிற்கு மட்டுமே உள்ளது.அதனால், மொத்த விற்பனை கடைகளும் குறைவாகவே உள்ளன. பொதுவாக, மாதவரத்தில், மாம்பழ சீசன் துவங்கும் போது, மாநகராட்சி மூலம், 30 குடோன்கள் வரை, மே, ஜூன் மாதத்திற்கு, ஏலம் விடப்படும்.ஒவ்வொரு குடோனுக்கும், இரண்டு மாதத்திற்கும் சேர்த்து, 70 ஆயிரம் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும். ஆனால், இந்தாண்டு, கொரோனா எதிரொலியால், மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க, குடோன்கள் ஏலம் விடப்படவில்லை.முன் பணம் கொடுத்து, தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே, இப்போது வியாபாரம் செய்கின்றனர்.மேற்கண்ட நடைமுறை பிரச்னைகளால், ஜவ்வாரி, பங்கனபள்ளி, செந்துாரா, ருமானி என, சில ரகங்கள் மட்டுமே, விற்பனைக்கு வந்துள்ளன. இன்னும், அல்போன்சா, இமாம் பசந்த், இமாத்தி, பீத்தர், ஜாங்கிரி, ரசம், சூரியகலா போன்ற ரகங்கள் வரவில்லை.இவற்றில், சூரியகலா மாம்பழம் பழரசம் தயாரிக்க, அதிக அளவில் வாங்கப்படுகிறது. மக்களிடம் வரவேற்பு பெற்ற, இனிப்பு மற்றும் மருத்துவ குணம் நிறைந்த இமாத்தி, ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது. அதன் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பலரும், இமாத்தி, அல்போன்சா, இமாம் பசந்த் ரகங்களை வாங்க, ஆர்வத்துடன் வருகின்றனர். மொத்த விற்பனை கடைகளில், மாம்பழங்கள் ரகத்திற்கு ஏற்றவாறு, 1 கிலோ, 65 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்கின்றன. சில்லரை விற்பனை கடையில், 75 ரூபாய் முதல், 100 ரூபாய் விற்கப்படுகின்றன.தரமான பழங்கள்இந்தாண்டு, வழக்கத்தை காட்டிலும் விளைச்சல் குறைந்துள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், ஊரடங்கால் போக்குவரத்து வசதியும் பாதிக்கப்பட்டது. அதனால், மாதவரத்திற்கான வரத்தும், தற்போது குறைந்துள்ளது. தினமும், 2 டன் அளவிற்கே மாம்பழம் வருகிறது. இருப்பு வைக்க போதிய இட வசதி இல்லை.இங்குள்ள வியாபாரிகள், தோட்டங்களில் இருந்து, நேரடியாக பழங்களாகவே, கொள்முதல் செய்கிறோம். அதனால், ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கும், நிலை இங்கு இல்லை. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு, தரமான பழங்களையே கொடுக்கிறோம்.சி.கணேசன், 50, மாம்பழ வியாபாரி, மாதவரம்.மொத்த விற்பனை கடைகளில், அனைத்து ரக மாம்பழமும், 20 கிலோ கொண்ட, ஒரு பெட்டியின் விலை பின் வருமாறு:

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X