பொது செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' வழியில் பயணித்தால் அபராதம்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
fastag, coronavirus lockdown, tamil nadu news, lockdown, chennai news,
 பாஸ்டேக்,அபராதம்

சென்னை: சுங்கச் சாவடிகளை கடக்க கைவசம் 'பாஸ்டேக்' இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் மின்னனு முறையில் கட்டணம் வசூலிக்கும் 'பாஸ்டேக்' நடைமுறை 2019 டிச. 15 முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தின் 48 சுங்கச் சாவடிகளிலும் இது செயல்பாட்டில் உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் பணம் செலுத்துவதற்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு வழி ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ஊரடங்கு காரணமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; மீண்டும் கட்டண வசூலிப்பு ஏப். 20ம் தேதி துவங்கியது. பாஸ்டேக் வழிகளில் மற்ற வாகனங்களும் பயணித்து வருகின்றன. இதனால் பாஸ்டேக் வைத்துள்ளவர்கள் தேவையின்றி காத்திருப்பதால் அவர்களின் நேரம் விரையமாகிறது.

எனவே பாஸ்டேக் இல்லாமல் அதற்கான வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்த நடைமுறையை இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
18-மே-202012:13:50 IST Report Abuse
ponssasi லஞ்சம் பெரும் காவலர்களால் ஏற்படுகின்ற தவறுகள் தான். பணம் கொடுத்தால் சரிசெய்யலாம் என்ற எண்ணம் ஒழுங்கு மீறி செயல்பட வைக்கிறது. நேர்மையானவர்களுக்கு பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம். இவை இரண்டும் மாறவேண்டும்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
18-மே-202011:09:37 IST Report Abuse
Rameeparithi நடைமுறையில் இதெல்லாம் இல்லை Fastag வழியிலும் காத்திருக்கும் நிலைதான் உள்ளது
Rate this:
Cancel
18-மே-202011:09:11 IST Report Abuse
தமிழ் போறபோக்குல சுவாசிக்கிறதுக்கும் காசு வசூல் பண்ணுவானுங்க இந்த டிஜிட்டல் திருடனுங்க.
Rate this:
18-மே-202013:42:29 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலைஅடேங்கப்பா சீமானின் தும்பி சொல்லுறார் கேட்டுக்கோங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X