பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை பகுதியில் மத்திய குழு ஆய்வு

Added : மே 18, 2020
Share
Advertisement

அடையாறு; அடையாறு மண்டலத்தில், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை, மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது.அடையாறு மண்டலத்தில், 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மண்டலத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை, மத்திய குழு நேற்று பார்வையிட்டது.வேளச்சேரியில், ஒரே வளாகத்தில் உள்ள, 10 வீடுகளில், 21 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அங்கு சென்ற மத்திய குழு, பல கேள்விகளை கேட்டு, விபரங்களை சேகரித்தனர்.மேலும், தரமணி, கொரோனா கண்டறியும் பரிசோதனை மையத்திற்கு சென்றனர். தினசரி எத்தனை பேருக்கு பரிசோதனை நடக்கிறது; எந்தெந்த அறிகுறியுடன் பரிசோதனைக்கு வருகின்றனர் போன்ற விபரங்களை, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டனர்.இதைத்தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கை குறித்து, மண்டல அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர். இந்த குழுவில், புதுச்சேரி, 'ஜிம்பர்' மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X