பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி கடைப்பிடிக்க குடை பயன்படுத்தும் நகராட்சி

Added : மே 18, 2020
Share
Advertisement

குரோம்பேட்டை; பல்லாவரம் நகராட்சியில், குடையை பயன்படுத்தி, இறைச்சி கடைக்காரர்கள், சமூக இடைவெளி பின்பற்றி விற்பனை செய்கின்றனர்.பல்லாவரம் நகராட்சியில், கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.வைரஸ் தொற்று உறுதியான பகுதிகள், 'சீல்' வைக்கப்பட்டு, வெளியாட்கள் உள்ளே செல்லாதவாறு, கண்காணிக்கப்படுகின்றன.மக்களுக்கு தேவையான, காய்கறிகளை, நகராட்சி நிர்வாகமே விற்பனை செய்கிறது. அதேபோல், மளிகை பொருட்களை, வீடுகளுக்கே சென்று, விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இறைச்சி மற்றும் மீன் கடைகளில், சமூக இடைவெளியை பின்பற்றாமல், விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.இதனால், வைரஸ் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நகராட்சி நிர்வாகம், இறைச்சி மற்றும் மீன் கடைகளில், குடையை பயன்படுத்தி, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும், மீறும் கடைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 'நோட்டீஸ்' அனுப்பியது.நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்று, இறைச்சி கடைக்காரர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி, விற்பனை செய்து வருகின்றனர். தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, கடைக்காரர்கள் சார்பில், குடை வழங்கப்படுகிறது. குடையை பிடித்தபடி, வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று, இறைச்சி வாங்கி செல்கின்றனர்.பின், அந்த குடைகளை, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து, அடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். இதன் மூலம், இறைச்சி கடைகள் மூலம், கொரோனா பரவல் தடுக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X