பொது செய்தி

தமிழ்நாடு

நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு செங்கை கலெக்டருக்கு உத்தரவு

Added : மே 18, 2020
Share
Advertisement

சென்னை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, செங்கல்பட்டு கலெக்டருக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, பல்லாவரம் நகராட்சி பகுதியான குரோம்பேட்டையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, நெமிலிச்சேரி ஏரி உள்ளது. மொத்தம், 37 ஏக்கர் பரப்பு இந்த ஏரி, பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. தற்போது, 10 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது. ஏரி, 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டிருந்தது.நம் நாளிதழில், நீர்நிலைகளை சீரமைக்க, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஏரி பாதுகாப்பு குழு களத்தில் இறங்கியது. அக்குழு, 3,000 லோடுக்கும் அதிகமான, பிளாஸ்டிக் கலந்த மண்ணை எடுத்தது. தொடர்ந்து, பொதுப்பணித் துறை வாயிலாக, 'டெண்டர்' விடப்பட்டு, ஏரி துார் வாரப்பட்டது. கடந்தாண்டு பெய்த மழையில், ஏரி நிரம்பிய நிலையில், தற்போது, கோடை காலத்தில் கட்டட இடிபாடுகளை ஏரியில் கொட்டி ஆக்கிரமிக்கும் செயலில், மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நெமிலிச்சேரி ஏரியின் தற்போதைய நிலை குறித்து, செங்கல்பட்டு கலெக்டர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், நெமிலிச்சேரி ஏரி பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு, அவற்றை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை, ஜூலை, 17க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X