பொது செய்தி

தமிழ்நாடு

கடலாடி பஸ்ஸ்டாண்டை எப்போது கட்டுவீங்க..

Added : மே 18, 2020
Share
Advertisement

கடலாடி : கடலாடி பஸ்ஸ்டாண்ட் 1969 ல் கட்டப்பட்டது. அவ்வப்போது பராமரிக்கப்பட்டது. 2010 முதல் சிமென்ட் பூச்சுகள்உதிர்ந்து, பெயர்ந்து விழத் தொடங்கியது. இதனால் பயணிகள் அச்சத்துடன் திறந்த வெளியில் காத்திருந்தனர்.

அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள் கடலாடி பஸ்ஸ்டாண்டின் அவல நிலை குறித்து நாற்று நடும் போராட்டம், படுத்து உருளும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மக்களின் போராட்டத்தால் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க கடந்த பிப்., மாத இறுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அதன் பின் பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 60 ஊராட்சி மக்களும் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் நிறைந்த கடலாடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் பணியை துரிதப்படுத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X