பொது செய்தி

தமிழ்நாடு

இல்லாதோருக்கு நிவாரணம் தாராளம்

Added : மே 18, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தி.மு.க., சார்பில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆதரவற்றவர்களுக்கு வழங்கபட்டது.

தென்காசி எம்.பி.,தனுஷ்குமார், ஒன்றிய தலைவர் மல்லி ஆறுமுகம், அவை தலைவர் செல்வமணி,நகர செயலர் அய்யாவுபாண்டியன், முத்துராமலிங்ககுமார் பங்கேற்றனர். விருதுநகர் சிவகாசி ஜீவக்கல் ஆதரவற்றோர் ஆசிரமம், சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, விருதுநகர் கருப்பசாமி நகர் விருட்சம் ஆதரவற்ற முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் 150 நபர்களுக்கு தலா 2 செட் புதிய ஆடைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

மதிய உணவு பரிமாறினார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் தினேஷ்குமார், மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயசீலி, சமூக நல அலுவலர் இந்திரா பங்கேற்றனர்.ராஜபாளையம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன் பட்டி, கிழவி குளம், சிவலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சலவை செய்வோர், முடி திருத்தும் தொழிலாளர்கள் என 220 பேருக்கு சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலா 10 கிலோ அரிசி பைகளை வழங்கினார்.மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் கந்த கிருஷ்ணகுமார், பொருளாளர் சுப்பையா கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X