பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ இயங்க கோரிக்கை

Added : மே 18, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனதலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் சிவாஜி ஆகியோர் முதல்வருக்கு அனுப்பிய மனு:மே 17 முடிவில் 3ம்கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது. 55 நாட்கள் ஆட்டோதொழிலாளர்கள் வறுமையில் வாழ்க்கை நடத்துகின்றனர். ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்க கோரியிருந்தோம். நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ரூ.2000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.ஒட்டுமொத்த ஆட்டோ டிரைவர்களில் 10 சதவீதம் பேர் கூட நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை. அறிவித்த தொகையும் இன்று வரை முழுமையாக சென்று சேரவில்லை. நான்காவது கட்ட ஊரடங்கிலாவது ஆட்டோக்களை இயக்க அறிவிக்குமாறு வேண்டுகிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X