சிறுநீரக நோயாளிகள் அவதி

Added : மே 18, 2020
Share
Advertisement

கமுதி : கமுதி அருகே கீழ முடிமன்னார்கோட்டை வேல்சாமி 55, சுப்பிரமணியன் 52, ஜெயலட்சுமி 45, ராஜ் 53, ஜஸ்டீன் 48, கூலிபட்டியை சேர்ந்த கணேசன் 52, கள்ளக்கரியை சேர்ந்த மலையாண்டி 49, மேலமுடிமன்னார்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி 49, ராஜகோபாலபுரத்தை சேர்ந்த நாகராஜன் 38, உட்பட கமுதி பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் மதுரை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில அவசர ஆம்புலன்ஸ் 102 சேவை மூலம் மதுரைக்கு வாரம் இருமுறை சென்று வந்தனர். கடந்த ஒரு மாதமாக ஆம்புலன்ஸ் 102க்கு அழைத்தால் மாற்று ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றனர். இதனால் டயாலிஸிஸ் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.ஆம்புலன்ஸ் 102 மாவட்ட மேற்பாற்வையாளர் மதுரம் கூறுகையில், மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 102 வாகனம் 3 மட்டுமே உள்ளன.

இந்த வாகனங்கள் பிரசவ அழைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அனுப்பப்படுகின்றன. இதனால் இவர்களை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் காலையில் அழைத்து சென்றால் திரும்பி வர இரவு ஆகி விடுவதால், கர்ப்பிணிகளை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இவர்களுக்கு கூடுதலாக வாகன வசதி ஏற்படுத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X