பொது செய்தி

தமிழ்நாடு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க தனியாக சுகாதார ஆய்வாளர்

Added : மே 18, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க தனியாக சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கென சுகாதாரத்துறை தனி சுகாதார ஆய்வாளர்களை நியமித்துஉள்ளது. அரசு மருத்துவமனையில் நிகழும் பிறப்பு, இறப்புகள் குறித்துகம்ப்யூட்டரில் விபரங்கள் ஏற்றப்பட்டு, பதிவு செய்யப்படும்.உரிய மருத்துவ அலுவலர்கள் ஒப்புதல் வழங்கிய பின்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க தனியாக சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கென சுகாதாரத்துறை தனி சுகாதார ஆய்வாளர்களை நியமித்துஉள்ளது. அரசு மருத்துவமனையில் நிகழும் பிறப்பு, இறப்புகள் குறித்துகம்ப்யூட்டரில் விபரங்கள் ஏற்றப்பட்டு, பதிவு செய்யப்படும்.உரிய மருத்துவ அலுவலர்கள் ஒப்புதல் வழங்கிய பின் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவால் டேட்டா என்ட்ரி இரு மாதங்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்களை பதிவு செய்யாமலே அடுத்த, அடுத்த நாட்களில் வருமாறு அலைக்கழிப்பு செய்கின்றனர்.உரிய நேரத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர். பிறப்பு, இறப்பு குறித்த தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து உரிய நேரத்தில் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X