பரமக்குடி : நயினார்கோவில் பகுதியில் நடப்பாண்டில் 2000 ெஹக்டேரில் நீடித்த மானாவாரி வளர்ச்சி இயக்க திட்டத்தில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது.பருவ சாகுபடிக்குப் பின் நிலத்தை உழுது சிறுசிறு கட்டிகளாக்கிவிட்டு விட வேண்டும்.இதனால் கோடை மழைநீரை மண்ணில் சேமிக்க முடியும். கோடை உழவால் பூச்சிதாக்குதல் குறைகிறது. களைகள் முளைப்பது தவிர்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நெல், கேழ்வரகு, குதிரைவாலி, எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் 50 சதவீதம் மானியத்தில் விதைகள், உயிர் உரங்கள் வழங்கப்படும். எனவே கோடை உழவு செய்யுமாறு நயினார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பானுப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE