சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறு செய்தவரிடம் தட்டிக்கேட்டவர் கொலை

Added : மே 18, 2020
Share
Advertisement

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே அண்ணனிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட தம்பி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கிலி 25. வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. உறவினர்களான இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதனை அறிந்த அழகர்சாமியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி 28, சங்கிலியிடம் 'எனது அண்ணனுடன் எதற்காக தகராறு செய்தாய்' எனக்கேட்டார்.இதில் ஆத்திரமடைந்த சங்கிலி, கிருஷ்ணமூர்த்தியை நெஞ்சில் கத்தியால் குத்தினார்.

வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இறந்தவரின் தரப்பினர் கத்தியால் குத்திய சங்கிலியின் வீட்டிற்குள் புகுந்து தீ வைத்ததில் பொருட்கள் சேதமடைந்தன. வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.கூடுதல் எஸ்.பி., சரவணன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் சங்கிலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X