மலைப்பகுதி விவசாயிகளே மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பகுதி விவசாயிகளே மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Added : மே 18, 2020
Share

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன வசதி பெற ரூ. 4 கோடி 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தோட்டக்கலைத் துறையில் சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது 980 எக்டேர் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சிறு விவசாயிகள் 5 ஏக்கர், பெரிய விவசாயிகள் 12.5 ஏக்கர் மானியத்திற்கு தகுதியாகும். மின், டீசல் மோட்டார், குழாய்கள் மற்றும் தொட்டி அமைக்கவும் மானியம் அளிக்கப்படுகிறது.இதற்கு சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் நகல், நில வரைபடம், 2 பாஸ்போர்ட் போட்டோக்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலங்களில் விண்ணப்பிக்கலாம்.

தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலைவளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய மத்திய, மாநில திட்டங்களில் அவகடா, மிளகு, முட்டைக்கோஸ்நாற்றுக்கள் மானிய விலையில் பெற தோட்டக்கலை பண்ணைகளை அணுகலாம்.தற்போது அலுவலகம் வர இயலாதவர்கள் நுண்ணுயிர் பாசன திட்ட விண்ணப்பத்தினை tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் 97867-73359 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X