சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்துகளில் இருவர் பலி

Added : மே 18, 2020
Share
Advertisement

எரியோடு : வடமதுரை, எரியோடு பகுதிகளில் நடந்த இருவிபத்துகளில் இருவர் பலியாகினர்.

எரியோடு கோவிலூர் அடுத்த பொம்மகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கபெருமாள் 57. நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் கருதனம்பட்டி பிரிவு அருகில் சென்றபோது கார் மோதி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

* வடமதுரை நரசிங்கபுரத்தை சேர்ந்த மில் தொழிலாளி சரவணன் 35. நேற்று மதியம் வடமதுரை நாடுகண்டனூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார். திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் பைக் மோதியதில் காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X