பழநி : பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும்முன் வகுப்பு நடத்தி தயார் செய்ய வேண்டும் என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தசங்கத்தின் மாநில தலைவர் திருலோகசந்திரன், பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது: தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவனை வெளியிட்டுள்ளது. இம் மாணவர்கள் தொடர் விடுமுறை, தொற்று நோய் அச்சம் போன்றவற்றால் மனஅழுத்தத்தில் உள்ளனர்.இதனை தவிர்க்க ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை உளவியில் ரீதியாக தயார் செய்யவும், தேர்வு பயத்தை நீக்கி மனதைரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தவும் தேர்வுக்கு சிலநாட்கள் முன்பாக பள்ளியில் பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE